‘நாடோடிகள்’ படம் மூலம் இயக்குனராக பிரபலமானவர் சமுத்திரகனி. இப்படத்திற்குப் பிறகு சசிகுமாரை வைத்து ‘போராளி’, ஜெயம் ரவியை வைத்து ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களை இயக்கினார். இவர் ஒரு பக்கம் படங்கள் இயக்கினாலும், மறு பக்கம் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் ‘தற்காப்பு’, ‘விசாரணை’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்கள் வெளியானது. இன்னும் இவர் நடிப்பில் பல படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. இவர் தற்போது ‘கிட்னா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் முடிந்த பிறகு ஜெயம் ரவியை வைத்து படம் இயக்குவதாக தெரிவித்திருக்கிறார்.
ஜெயம் ரவி தற்போது ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் படத்திலும், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
இப்படங்கள் முடிந்த பிறகு சமுத்திரகனி இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment