
ட உள்ள எட்கா உடன்படிக்கைக்கு எதிராக எதிர்வரும் 24ம் திகதி பாரிய எதிர்ப்பு கூட்டம் ஒன்றை நடத்த தொழில் வல்லுநர்களின் கூட்டு அமைப்பு தீர்மானித்துள்ளது.
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கூட்டு தொழிற்சங்கங்களல் பல கலந்து கொள்ளவுள்ளன.
24ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் சுமார் 50 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளன.
இதனிடையே எட்கா உடன்படிக்கைக்கு எதிராக ஏனைய அமைப்புகள், தொழிற்சங்கங்களை இணைத்து எட்கா எதிர்ப்பு பொது முன்னணியை ஏற்படுத்த தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த முன்னணியில், விவசாய அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சில அரசியல் கட்சிகளையும் இணைத்து கொள்வதற்காக பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரும் நோக்கில் செயற்படும் அனைத்து அமைப்புகளும் கூட்டு என்ற பெயரை பயன்படுத்தி வருகின்றன.
தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பும் அவ்வாறான அமைப்புகளில் ஒன்றாகும். இதில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சிலரும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment