அரசாங்க அலுவல்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டியது மீறப்பட முடியாததொன்று என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதுவரையிலும் இந்த நடைமுறை மீறப்பட்டிருந்தால் எதிர்வரும் 3 மாதங்களில் அதனை சரிப்படுத்திக்கொள்ளுமாறும் அமைச்சர் பணித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அபிவிருத்தி நிர்வாக மையத்தில் இடம்பெற்ற மாவட்ட செயலாளர்களுடனான இந்த வருடத்தின் இரண்டாவது சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்காவிலுள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். நிர்வாகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அபிவிருத்திக்குத் தேவையான நிதி, அரசியல் பழிவாங்கல் போன்ற மக்களை பாதிக்கும் விடயங்கள் உள்ளிட்ட பலவற்றை அமைச்சர் இதன்போது கேட்டறிந்துகொண்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment