முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராம மக்கள், தம்மை தமது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்துமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை காலை பத்து மணிக்கு கேப்பாபுலவு மாதிரிக்கிராம பிள்ளையார் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தம்மை மீள்குடியமர்த்துமாறு கோரி மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே ஊர் மக்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்தினர் வேண்டுமானால் காடுகளில் இருக்கட்டும் தமது 520 ஏக்கர் காணிகளை தமக்கு கையளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தமக்கு ஜனாதிபதியினுடைய எழுத்துமூல உறுதிமொழி கிடைக்கும்வரை இந்தப் போராட்டம் தொடருமென தெரிவித்தனர்.
கடந்த பல நுறு ஆண்டுகளாக பரம்ரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீகக் காணிகள் தற்போது இராணுவத்தினரால் கையகப்படத்தப்பட்டு உள்ளதாகவும் இதற்கு மாற்றீடாக கேப்பாபிலவு மாதிரிக் கிராமமென 20 பேர்ச் காணிகளை வழங்கி தம்மை சிறைக் கைதிகளாக வைத்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment