திருகோணமலை – குச்சவெளிப் பிரதேசத்தில் இயங்கி வருகின்ற மூன்று பாடசாலைகளின் பெற்றோர்களும் -பாடசாலை
அபிவிருத்திக் குழுவினரும் ஒன்றிணைந்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி நாளை (08) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 18 ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் -அந்நூரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் 04 ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் – இலந்தைக்குளம் வித்தியாலயத்தில் 04 ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் தெரிவிக்கிறனர்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கும்- திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்கும் பல தடவைகள் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கடிதம் மூலமாகவும் – பெற்றோர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியலயத்திற்கு முன்பாக காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள ஆர்பாட்டத்திற்கு சிறந்த தீர்வு கிடைக்காவிட்டால் நாளை மறுதினம் புதன்கிழமை (09) திருகோணமலை வலய கல்வி அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நூரியா கனிஷ்ட பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் என்.எம்.நளீம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment