தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளில் நால்வர் உடல் நலம்
பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்களை உடன் விடுவிக்கக் கோரி 14 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகஸின் சிறையில் இருக்கும் 14 அரசியல் கைதிகளே கடந்த 13 நாட்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் நால்வரே உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மார்க்கண்டு நேமிநாதன் (வயது – 43) யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கச்சாய், அகஸ்ரின் ஞானசீலன் (வயது 28) முல்லைத்தீவு – உடையார்கட்டு, பாலசுந்தரம் மனோகரன் (வயது 42) கிளிநொச்சி ஆகியோரின் உடல்நலம் மோசமடைந்ததால் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் (வயது 37 யாழ்ப்பாணம் – மானிப்பாய்) என்பவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
0 comments:
Post a Comment