வவுனியா சிதம்பரபுரம் முகாமில் வசிக்கும் ஆண்டு 1 தொடக்கம் 11 வரை கல்வி கற்க்கும் 46 மாணவர்களுக்கு நகரசபை ஊழியரும் ,சிதம்பரபுரம் ஸ்ரீ தான் தோன்றி நாகம்மாள் கோவில் பொருளாளருமான கே.ரவிசந்திரன் தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டு கழகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பிரான்சில் வசிக்கும் சென்றலைட்ஸ் விளையாட்டு கழக உறுபினர்களால் கற்றல் உபகரணங்கள் 19.03.2016 அன்று சிதம்பரபுரம் ஸ்ரீ தான் தோன்றி நாகம்மாள் கோவிலில் வைத்து வழங்கி வைக்க பட்டது .
இந்த நிகழ்வில் வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டு கழக தலைவர் எ.ரெக்ஸ்சன்,செயலாளர் அ.கிரிசாந்தன் ,தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ),செயலாளர் மாணிக்கம் ஜெகன் , ஸ்ரீ தான் தோன்றி நாகம்மாள் கோவில் பொருளாளர் ரவிசந்திரன் ,பழனி முருகன் ஆலய தலைவர் அ.மாதவன் உட்பட மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் உரையாற்றிய மாணிக்கம் ஜெகன் அவர்கள் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம் உங்களின் இந்த நிலையை கேள்விபட்டு இந்த உதவியை வழங்கி உள்ளார்கள் ஆகவே நீங்கள் நன்றாக படித்து நல்ல பிள்ளைகளாக வர வேண்டும் என்று கேட்டு கொண்டார் .
அடுத்து உரையாற்றிய வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டு கழக தலைவர் எ.ரெக்ஸ்சன் அவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களான நாம் எமது பாடசாலைக்குள் தான் எமது செயற்பாடுகளை செய்து வந்தோம் ,முதன் முறையாக வெளி பாடசாலை மாணவர்களுக்கு எமது பிரான்ஸ் பழைய மாணவர்கள் மூலம் இந்த உதவியை செய்து உள்ளோம் ,எமது நோக்கம் எமது மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு தேவையான அனைத்தும் கிடைக்க வேண்டும், அதற்க்கு வறுமை ஒரு தடையாக இருக்க கூடாது
, ஆகவே எமது மாணவர்களின் கல்விக்கான பணி தொடரும் என்றும் எமது பிரான்ஸ் வாழ் பழைய மாணவர்களுக்கும் ,தமிழ் விருட்சம் அமைப்புக்கும் நன்றிகள் என்றார் .
அடுத்து உரையாற்றிய தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )அவர்கள் 25 வருட முகாம் வாழ்க்கைக்கு பின் தற்போது தான் உங்களுக்கு காணிகள் கிடைத்து உள்ளன .வீட்டு திட்டம் கிடைக்க வேண்டும் ,அது மட்டும் அல்ல உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் நன்றாக கற்க்க வேண்டும் ,அதற்கான சிறு உதவி தான் இன்று வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டு கழகத்தின் இந்த உதவி ,நான் கேட்டவுடன் இந்த உதவியை வழங்கிய பிரான்ஸ் சென்றலைட்ஸ் விளையாட்டு கழக உறுபினர்களுக்கும் ,வவுனியா சென்றலைட்ஸ் விளையாட்டு கழக உறுபினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் என்றார் .
அடுத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டன .
இறுதியில் மாணவியின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
0 comments:
Post a Comment