வவுனியா நகரசபையின் ஏழு ஊழியர்களின் தனிநபர் கோப்புகள் கானாமல் போயுள்ளதாக சம்மந்தப்பட்ட ஊழியர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அலுவலகத்தில் மிக அவதானமாகவும் பாதுகாப்பாகவும் பேணப்படும் தனிநபர் கோவைகள் கானாமல் போயுள்ளனவா?அல்லது கானமல் ஆக்கப்பட்டுள்ளனவா? என்ற சந்தேகம் சக ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது கடந்த காலங்களில் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் நகரசபை நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை முன்நின்று நடாத்தியவர்களின் கோவைகளின் கானாமல் போயுள்ளமை இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
ஆர்.சித்ரன், கே.கோல்டன் , ஏ.நடராச , எஸ்.மாணிக்கம், கே.காளிதாஸ், வி.விஜேந்திரகுமார், வெஞ்சலோஸ் ஆகியோரின்
தனிநபருக்கான கோவைகளே காணாமல் போயுள்ளன.இந்த செயற்பாடு ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
0 comments:
Post a Comment