பெண்ணொருவருக்கு அசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் வீரகுல, கல்பொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26ம் திகதி 38 வயதுடைய பெண்ணொருவருக்கு எசிட் வீசி தாக்குதல் நடத்தியதாக வீரகுல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 46 வயதுடைய வதுரகம பிரதேசத்தைச் சேர்ந்த எசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணின் கணவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment