தெறி படம் இன்னும் ரிலிஸே ஆகவில்லை, அதற்குள் எத்தனை சாதனைகள் படைத்து வருகின்றது. ஏற்கனவே டீசரில் அதிக லைக்ஸ், ஹிட்ஸ் என குவிய தற்போது ட்ரைலரும் யு-டியூபில் கலக்கி வருகின்றது.
தெறி ட்ரைலர் 5 மில்லியன் தாண்டியது மட்டுமில்லாமல் 2 லட்சம் லைக்ஸுகளை தாண்டியுள்ளது. தெறி டீசரும் 2 லட்சம் லைஸுகளுக்கு மேல் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஒரு படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் 2 லட்சம் லைக்ஸுகளை எட்டியிருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன் முறையாம்.
0 comments:
Post a Comment