வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் வீதியிலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வான் புளியங்குளம் சந்திப்பகுதியில் இன்று பிற்பகல் விபத்திற்குள்ளாகியுள்ளது குறித்த வானின் சாரதி படுகாயமடைந்த நிலையில் புளியங்குளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment