
அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்பை மேம்படுத்த முடியவில்லை எனவும் மாறாக அதன் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நிபுணத்துவம் அரசாங்கத்திற்கு இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பானிலுள்ள இலங்கை பிரஜைகள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான ஸ்கைப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இடம்பெற்ற காணொளி மூலமான சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி என்ற வகையில் சமூகம், அரசியல் மற்றும் சர்வதேச ரீதியில் தனது தலைமைத்துவத்தை வழங்கி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போரை வெற்றி கொண்டதாக கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்று ஒருவருட காலத்திற்குள் நாட்டின் அபிவிருத்தியை அரசாங்கம் முடக்கியுள்ளதாக கோத்தபாய ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். பழிவாங்கல் நடவடிக்கைகளைத் தவிர வேறு எதனையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை என குறிப்பிட்ட அவர், பாதாளத்தில் நாடு விழுவதில் இருந்து பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment