அமையவுள்ள விவசாய உற்பத்திப்பொருட்கள் விற்பனைக்கான விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணி வழங்கல் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று காலை (14.03.2016) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் றோகணபுஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வவுனியா ஏ 9 வீதிக்கு அருகிலுள்ள மாவட்ட விவசாயப்பண்ணையின் ஒருபகுதி காணி மேற்படி தேவைக்காக ஒதுக்குவதாக முடிவெடுக்கபட்டது.
கடந்த வருட இறுதியில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின்போது வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கான சந்தைவாய்ப்பு பிரச்சனை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தநிலையில் வவுனியாவில் விசேட பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மேற்படி தேவைக்கான காணிதொடர்பில் முடிவெதுவும் எடுக்கப்படாத நிலையில் இன்றைய விசேட கூட்டம் அரசாங்க அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சி.சிவமோகன், காதர் மஸ்த்தான், மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, ம.தியாகராசா,ஏ.ஜயதிலக, தர்மபால செனிவரத்தின மற்றும் பிரதேச செயலாளர், பிரதிப்பணிப்பாளர்-விவசாய விரிவாக்கம், பிரதிப்பணிப்பாளர் விதை உற்பத்தி, திட்டமிடல் பணிப்பாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப்பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment