களுத்துறை, அளுத்கம பகுதியில், ''பெண்களுக்கு மட்டும்” நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையமொன்றை பொலிஸார் கடந்த வாரம்
சுற்றிவளைத்துள்ளனர்.
இரண்டு நண்பிகள் இணைந்து வீடொன்றில் நீண்டகாலமாக நடத்தி வந்த இந்த சூதாட்ட நிலையத்தில் பெண்கள் மட்டுமே சூதாட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வந்த குறித்த சூதாட்ட நிலையம் தொடர்பில் தகவல் அறிந்த பிரதேசவாசியொருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சூதாட்ட நிலையம் உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது பெருந்தொகைப் பணத்துடன் சூதாடிக் கொண்டிருந்த ஐந்து பெண்கள் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
சூதாட்ட விடுதி உரிமையாளர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அளுத்கம பிரதேசத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஏராளமான பெண்கள் நாளாந்தம் சூதாட்டத்திற்காக அங்கு வந்து செல்வது தெரிய வந்துள்ளது.
அத்துடன், தமது கணவன்மார் வேலைக்குச் சென்றதன் பின்னர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே குறித்த சூதாட்ட நிலையத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment