காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளன.
மெக்ஸ்வெல் பரணகம, டயிள்யூ ஏ.ரி. ரத்னாயக, சுரன்யனா விஜயரட்ண, ஏச்.சுமணபால ஆகியோரால் இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இங்கு ஆணைக்குழு அதிகாரிகளால் மரண சான்றிதழ்களை பெறுவதற்கு சம்மதமா என்ற கேள்வி அனைவரிடமும் கேட்கப்படுவதாகவும் எனினும் அதனை நிராகரித்து பொதுமக்கள் தமது உறவுகளை தேடித் தருமாறு கோரிக்கை விடுத்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த ஆணைக்குழு முன்னிலையில், 100க்கும் மேற்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்க வந்துள்ளனர்.
0 comments:
Post a Comment