ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
மனித உயிர் ஒப்பற்றது என்பதனாலேயே அனைத்து தியாகங்களை விடவும் உயிர்த் தியாகம் உன்னத தியாகமாகக் கருதப்படுகின்றது.
மனிதாபிமானத்தையும் மிஞ்சிய தேவத்துவத்தை அடைந்துகொள்வதற்காக இயேசு கிறிஸ்துநாதர் செய்த மாபெரும் தியாகத்தின் புண்ணியத்தன்மையை அனுஷ்டிக்கும் முகமாகவே உலகவாழ் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
ஒருவர் மற்றவர் மீது காட்டும் அன்பு, கருணை மற்றும் கௌரவம் என்பவற்றிலேயே இயேசு கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளின் மகிமை தங்கியுள்ளது.
ஒருவர் இன்னொருவருக்காக தியாகம் மேற்கொள்ள முடியுமானதாக இருப்பின், அவரது அத் தியாகத்தின் மூலம் மனிதாபிமானம் மேன்மையானதாக அமையும்'' என்பது இயேசு கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் பற்றிய செய்தியின் உலகளாவிய பிரகடனமாகும்.
அதிகார மோகம், சூழ்ச்சி மற்றும் பொய்மை ஆகியவற்றை தோற்கடித்து உன்னத நிலையை எய்திய இயேசு கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளில் வாய்மையினதும் தியாகத்தினதும் மறுபிறப்பு மீள உருவெடுக்கின்றது. வாய்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாதென்பதே இதன் அர்த்தமாகும்.
சமத்துவத்துடன் உலகை நோக்குவதற்கு மாந்தர்களை பழக்கப்படுத்திய மேன்மைதங்கிய மதங்கள் காரணமாகவே மனிதாபிமானம் எப்போதும் இத்திருநாளில் உண்மையாக ஒளி வீசி பிரகாசிப்பதுடன் குரோத உணர்வு போன்ற தீய சிந்தனைகள் இல்லாதொழிகின்றன.
இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள், இந்த மனிதாபிமானத்தின் மகிமையை தத்ரூபமாக எடுத்துக்காட்டிய மத வழிபாடாகும்.
அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், இயேசு கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளின் ஒப்பற்ற அருள் கிட்டுவதற்கும், அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதற்கும் இந்நன்நாளில் பிரார்த்திக்கின்றேன்" - என்றுள்ளது.
0 comments:
Post a Comment