எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துமக்கள் பிரதிநிதிகளினால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன் வைக்கப்படுகின்ற பல்வேறு கோரிக்கைகளை இங்கு நிறைவேற்ற முடியாத ஒரு துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டுள்ளதை நாம் காணக்கூடியதாக உள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று; திங்கட்கிழமை (14) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்கள் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தின் வீதிகள்,உற்கட்டமைப்பு,மீள் குடியேற்றம், மின்சாரம்,போக்கு வரத்து உற்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகின்றது.
ஆகவே இந்த நிதி மத்திய அரசாங்கத்திடம் இருந்து போதிய அளவு நிதி இந்த மாவட்டத்தினுடைய அபிவிருத்திற்கு கிடைக்கவில்லை என்பது ஒரு விடையம்.மேலும் இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய சில நிர்வாக ரீதியான சில நிர்வாக சீர்கேடுகள் காணப்படுகின்றது.
மாவட்டத்தின் பாதைகள் புனரமைப்பதற்காக அதிகவவான கிரவல் மண் தேவைப்படுகின்றது,மணல் மண் தேவைப்படுகின்றது.ஆனால் இக்கிராம வீதிகள் புனரமைப்பதற்கு கிரவல் மண் எடுப்பதற்காக கடந்த மாதம் இடம் பெற்ற மன்னார் மாவட்;ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு,நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment