இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள எட்கா என்ற பொருளாதார உடன்படிக்கையின் வரைபு தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என தெரிவிக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா வெகு விரைவில் எமது நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.
கண்டிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வை.கே.சின்ஹா ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
எட்கா என்ற பொருளாதார உடன்படிக்கை தொடர்பாக முறையான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த உடன்படிக்கையால் இலங்கை மக்கள் பாதிக்கப்படுவர் என கூட்டு எதிர்க் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இரு நாட்டு மக்களும் பயனடையும் வகையிலேயே நாங்கள் ஒப்பந்தங்களை மேற்கொள்வோம். இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவி செய்வதற்கு இந்தியா ஆர்வமாக உள்ளது என்றார்.
0 comments:
Post a Comment