எட்கா உடன்படிக்கை வரைபு கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது!இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள எட்கா என்ற பொருளாதார உடன்படிக்கையின் வரைபு நேற்று கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவி;க்கிரம இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மலிக் சமரவிக்கிரம இதனைக் குறிப்பிட்டார்.
இந்த வரைபின் ஒரு நகல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்திய அரசாங்கத்தின் பதில் 3 வாரங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தின் இணக்கம் ஏற்பட்டவுடன் வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com