அரசாங்கம் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் கவிழ்க்கப்படும் என்று மேல்மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார்.
மினுவாங்கொடையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர்,
மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் பொது எதிர்க்கட்சி ஒன்றை அமைத்து அரசாங்கத்தை தோற்கடிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய 7 உறுப்பினர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் குறித்த கைதுகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment