முல்லைத்தீவு குமுளமுனை மேற்கு பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் ஒருவர் பலியான சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
சம்பவம் குறித்து தெரியவருவதாவது
மேற்ப்படி பகுதியில் வசிக்கும் காசிநாதர் நாகராசா வயது(60) என்பவர் இன்று குளிப்பதற்காக கிணற்றில் நீர் அள்ளிய சமயத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து பலியாகியுள்ளார்
.குறித்த முதியவர் ஒருவகை வலிப்பினால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு கிணற்றில் நீர் அள்ளிய சமயத்திலேயே வலிப்பு ஏற்ப்பட்டமையால் கிணற்றில் தவறி வீழ்ந்திருக்கலாம் என குடுப்பத்தினர் சந்தேகம் வெளியிட்டனர் .
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைதீவு போலீசார் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு குடுப்பத்தினரிடம் சடலத்தை ஒப்படைத்தனர் .
0 comments:
Post a Comment