
குறித்த அழைப்புக்கள் யாரால் என்ன நோக்கத்திற்காக எடுக்கப்பட்டன என்பது குறித்து கண்டறியவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் ஐ.எஸ். உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் அச்சுறுத்தல்இ அவர்களது ஊடுருவல் ஆகியவற்றை தடுக்க இலங்கையில் 24 மணி நேர விஷேட பாதுகாப்பு ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தர்.
இந்த விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் முப்படைகளுடன் பொலிஸ் உளவுப் பிரிவுகளும் இணைந்து செயற்படுவதாகவும் மேலும் சில அரச நிறுவனங்களும் இதில் இணைத்துக்கொள்ளப்ப்ட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைக்கு இலங்கைக்குள் ஐ.எஸ். உள்ளிட்ட வெளி நாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்த அவர் எனினும் அது குறித்து கூடுதல் அவதானம் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தொடர்பில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
இந் நிலையிலேயே பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஏற்படுத்தப்பட்ட அனாமேதய தொலைபேசி அழைப்புக்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக இராணுவ பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே ஐ.எஸ். உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் அவற்றால் இலங்கைக்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விஷேட குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் நெருங்கி செயற்படுகின்றனரா இலங்கைக்குள் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து அந்த விஷேட குழு முழு நேர விசாரணையில் உள்ளதாகவும் தற்போது வரை நாட்டுக்குள் பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து தகவல் இல்லை எனவும் தேசிய உளவுப் பிரிவின் தகவல்கள் உறுதிப்படுத்தின.
முன்னதாக பெல்ஜியம் தாக்குதலைத் தொடர்ந்து நேற்று முன் தினம் முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டன. அனாமேதய தொலைபேசி அழைப்புக்கள் உள்ளிட்ட சில காரணிகளை அடுத்தே இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலக தகவல்கள் சுட்டிக்காட்டின.
0 comments:
Post a Comment