ஒரு ஆணாக, உங்கள் காதலி அல்லது மனைவியிடம் இருந்து பல எதிர்ப்பார்ப்புகளை நீங்கள் கொண்டிருப்பீர்கள்.
அவரை முதன் முதலில் பார்த்த நாள் முதல், டேட்டிங் சென்றது வரை பல எதிர்ப்பார்ப்புகள் மாறிக்கொண்டே வரும். ஒரு ஆணாக, எப்போதுமே சில விஷயங்களை நீங்கள் செய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு காரணம் இந்த விஷயங்களை நீங்கள் செய்யும் போது உங்கள் உறவில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
உங்கள் உறவு உடையாமல் இருக்கவும் தேவையற்ற தவறான புரிதல்கள் ஏற்படாமல் இருக்கவும், உங்களுக்கு போதிய உதவிகளை அளிக்கும். அப்படி ஆண்கள் என்ன தான் செய்யக்கூடாது என்பதை தான் முக்கியமாக பார்க்கப் போகிறோம். உறவுகள் என்பது ஆச்சரியங்கள் நிறைந்ததாகும். அதே போல் பெண்கள் எப்படி சிலவற்றை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதும் ஆண்களின் அறிவுக்கு எட்டுவதில்லை.
உறவின் போது ஆண்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் :
முரண்பாடான முடிவுகளை எடுத்தல் :
முரண்பாடான முடிவுகளை எடுப்பதால் ஒரு உறவில் தேவையற்ற பிரச்சனைகள் முளைக்கும். ஒரு ஆணாக, நடைமுறைக்கேற்ற விவேகத்துடன் இருப்பது மிகவும் முக்கியமாகும்; குறிப்பாக ஒரு உறவில் ஈடுபட்டிருக்கும் போது. தவறான முடிவை எடுக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவது இல்லை.
பொறுப்புகளில் இருந்து தப்பி ஓடுவது :
ஒரு ஆணாக, பொறுப்புகளில் இருந்து தப்பி ஓடுவது என்பது ஒரு உறவில் செய்யக்கூடிய மிகவும் மோசமான செயலாகும். ஆண்கள் பொறுப்புடன் இருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. காரணம் அவர்கள் ஆண்கள். குறிப்பாக, ஒரு உறவில் ஆணின் பங்கு அதிகமாக இருக்கையில், பொறுப்பில் இருந்து தப்பி ஓட அவர்கள் முயற்சிக்கின்றன.
தவறு நடக்கையில் கூச்சல் போடுவது :
பெண்கள் பொதுவாக மென்மையானவர்கள். ஒரு விஷயத்திற்காக நீண்ட நேரம் அவர்களை பார்த்து கூச்சல் போட்டு கொண்டே இருந்தால், ஆரோக்கியமான உறவில் அது எரிச்சலை ஏற்படுத்தும்.
முதிர்ச்சியடையாமல் நடப்பது :
ஒரு உறவில் ஆண்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமானது முதிர்ச்சியடையாமல் நடப்பது. முதிர்ச்சியடையாமல் நடப்பது உங்கள் மீதுள்ள மதிப்பை குறைத்து விடும்.
அளவுக்கு அதிகமாக பொய் பேசுவது :
ஒரு உறவில் அனைவரும் பொய் பேசுவது இயல்பு தான். ஆனால், அதற்காக சகட்டு மேனிக்கு பொய்களை அள்ளி வீசலாம் என அர்த்தம் கிடையாது. அடிக்கடி நீங்கள் பொய் பேசி மாட்டிக் கொண்டீர்களானால் கண்டிப்பாக உங்கள் உறவு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.
உங்கள் கருத்தை அவர்கள் மீது திணிப்பது :
ஒரு உறவில் நீங்கள் தவிர்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் இதுவாகும். உங்கள் ஆசைகளை உங்கள் காதலி அல்லது மனைவியின் மீது திணித்தால் அது உங்களை எங்கேயும் கூட்டி செல்ல போவதில்லை.
உங்கள் நண்பர்களின் முன் அவர்களை சங்கடப்பட வைப்பது :
ஒரு உண்மையான ஆண் இதனை கண்டிப்பாக செய்ய மாட்டான். தன் மனைவி அல்லது காதலியை நண்பர்கள் அல்லது பிறரின் முன்னிலையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்க மாட்டான்.
அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்பு :
இந்த பொதுவான குணம், ஆண்களுக்கு மட்டுமே பொருந்துகின்ற விஷயம் அல்ல. ஒரு உறவில் அளவுக்கு அதிகமாக எதிர்ப்பார்த்தால், உங்களை எரிச்சலடைய செய்துவிடும்.
சரியாக இருக்கும் போது அதனை ஒப்புக் கொள்ளுங்கள் :
தன் மனைவி அல்லது காதலி சரியாக இருந்தாலும் கூட அதனை ஒப்புக்கொள்ளாத ஒரு கெட்ட பழக்கம் ஆண்களிடம் உள்ளது. ஒரு உறவில் கண்டிப்பாக ஆண்கள் தவிர்க்கக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஈகோ :
பல உறவுகள் முடிவடைவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ஈகோ. இது உங்கள் காதலி அல்லது மனைவியிடம் மட்டுமல்லாது, உங்கள் வாழ்க்கையில் அனைவரிடமும் இது பொருந்தும். ஆண்களே, உங்கள் ஈகோவை விட்டொழியுங்கள். உங்களிடம் உள்ள ஈகோவால் உங்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை
0 comments:
Post a Comment