இந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகாராஸ்ரா மாநிலத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு, இதில் 64 வயதான இலங்கைப் பெண் ஒருவரே பலியாகியுள்ளார்.
இவர் மேலும் சிலருடன் சுற்றுலா நிமித்தம் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் பயணித்த பஸ் குல்தாபாத்கி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, குறித்த பெண் பஸ்சில் இருந்து வௌியேறி பாதையில் செல்ல முற்பட்ட வேளை, மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதனையடுத்து படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்துள்ளார்.
அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர இந்திய பொலிஸார் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment