கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் முன்னாள் விஹாராதிபதியும் சமூக நீதிக்கான அமைப்பின் முன்னாள் அழைப்பாளருமான மாதுலுவே சோபித தேரரின் மரணம் குறித்து அரசாங்கம் விசாரணை நடாத்தும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சோபித தேரரின் மரணம் தொடர்பில் வதந்திகள் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் திறந்த மனதுடன் செயற்பட்டு வருவதாகவும் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோபித தேரரின் மரணம் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment