கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல்குறைந்துள்ளதால் தோட்ட நிர்வாகத்தால் வாரத்தில் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள்மாத்திரமே வேலை வழங்குகின்றனர். இதன் காரணமாக இம்மக்கள் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சூழ்நிலையில் திடீரென 7.20 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்புஇம்மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவைதனது உணவிற்காக பயன்படுத்துகின்றார்கள்.
அத்தோடு இலகுவான முறையில் உணவுகளை தயாரித்துக்கொள்வதற்கு கோதுமை மாமிக முக்கியமான பங்கினை வகிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கும் இதேவேளைகோதுமை மாவை மானிய விலையில் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்என கோரிக்கை விடுப்பதோடு தற்போது கூட்டு ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடங்கள் ஆகின்ற போதிலும் இன்னும் தமக்கான சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்காமல்இவ்வாறான அத்தியவசிய பொருட்களுக்கு விலை அதிகரிப்பது நியாயமற்ற செயல்பாடுஎன இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலகட்டத்தில் அரிசி மானியவிலையில் கொடுத்த போதிலும் குறித்த திட்டம் மக்களை சென்றடையவில்லை. ஓர்இரு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது.
இத்திட்டத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது அதிகரித்துள்ள குடும்பபொருளாதார பிரச்சினையில் மற்றுமொரு பிரச்சினையாக மாவின் விலை அதிகரிப்புகாரணமாக அமைந்துள்ளது.
எனவே தோட்ட தொழிலாளர்களின் பொருளதாரத்தை நலன் கருதி வரட்சிக்கானநிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு பொருட்களின் விலைவாசியைஅதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள்கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment