தான் ஆட்சிக்கு வரும்போது நாடு உணவு நெருக்கடி, சுனாமி பேரழிவு, எண்ணெய் நெருக்கடி மற்றும் பயங்கரவாத நெருக்கடி ஆகியவற்றிற்கு முகங்கொடுத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நேற்று (17) கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில்
இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் மக்கள் பேரணியின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவ்வாறான ஒரு நிலையிலும் கூட, சர்வதேச நாடுகளில் தங்கி வாழ்வதை தவிர்த்து நாட்டை அரிசியில் அபிவிருத்தி செய்வதற்கு மற்றும் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு முடிந்ததாகவும், மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை குறைக்கவில்லை என்றும் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டிற்குள் பாரிய அளவு கடன்களைப் பெற்றுள்ளதாகவும், எனினும் எவ்வித அபிவிருத்திகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அத்துடன் தனது குடும்ப உறுப்பினர்களை சிறையிலடைத்தாலும் தனது அரசியல் பயணத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
0 comments:
Post a Comment