நடப்பாண்டு வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்ற அனுமதியுடன் திருத்தம் செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் மேற்கண்டாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஏற்றுமதி வருமானம் 25 சதவீதமாக குறைவடைந்துள்ளது. மேலும் குறித்த ஆட்சிக்காலத்தின் போது உலக நாடுகளிலிருந்து அதிகளவிலான கடன் பெற்றமையினால் தற்போது அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 30 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இதன்படி அதிகளவிலான முதலீகளை மேற்கொண்டு இலங்கையின் தொழில்வாய்ப்பு பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்கமையவே பத்து இலட்சம் தொழில்வாய்ப்பு திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
அத்துடன் சுற்றுலாதுறை வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைகளில் அதிகமான வருமானம் பெறவுள்ளோம். மேலும் இலங்கையில் அதிகளவிலான முதலீடுகளை பெற்றுக்கொண்டு அதனூடாக செய்யப்படுகின்ற உற்பத்தி இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம். இலங்கையின் சந்தையில் அதற்கான போதியளவு இடம்கிடையாது. இந்து சமுத்திரத்தின் கேந்திரநிலையம் என்ற வகையில் எமது உற்பத்திக்கு அதிகளவு மதிப்பு வழப்படும். இந்து சமுத்திரத்தின் அதிக சனத்தொகை என்ற நாடாக இந்தியா காணப்படுவதனால் அந்நாட்டின் தேவைகள் அதிகளவில் உள்ளன. இதன்படி எமது உற்பத்திகளை இந்தியாவுடன் கொடுக்கல் வாங்கல் செய்யவுள்ளோம்.
ஆகவே இதன்போது நடப்பாண்டில் உள்ள வரவு செலவுத்திட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யவேண்டும். அரசாங்கத்தின் திட்டமிடல் செயற்பாடுகளில் பல்வேறு மாற்றம் செய்யவேண்டும். இதன்படி பாராளுமன்றத்தின் அனுமதியுடன் திருத்தம் செய்யவுள்ளோம்
0 comments:
Post a Comment