விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
இதற்கமைய கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி முன்னிலையாகுமாறு விசேட நீதிமன்ற நீதவான் ஐராங்கனி பெரேரா அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இலக்குவைத்து கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு - கொள்ளுப்பிட்டி, பித்தல சந்தியில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததது. இதில் அவர் மயிரிழையில் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையில் கோட்டாபய ராஜபக்சவின் சாட்சியங்களைப் பதிவுசெய்துகொள்ளும் பொருட்டு அவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
0 comments:
Post a Comment