யாழ்.தனியார் பஸ் நிலையம் அருகில் 14 லட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இரு இளைஞர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் காலை பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலொன்றையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து 8.கிலோவும் 400கிராமும் பெறுமதியான கேரள கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்று காலை மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கேரள கஞ்சாவினை கடத்தி வந்திருப்பதாக எமக்கு இரகசிய தகவலொன்று கிடைத்திருந்தது.
இதன்படி யாழ்ப்பாணம் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் வைத்து ஒருவரை கைது செய்தோம். அவரிடமிருந்து 2கிலோவும் 100கிராமும் பெறுமதியான கஞ்சா மீட்கப்பட்டது.
மற்றைய நபரை யாழ்.பிரதான தபால் நிலையத்துக்கு அண்மையில் வைத்து கைது செய்தோம். அவரிடமிருந்து 6கிலோவும் 300கிராமும் பெறுமதியான கஞ்சா மீட்கப்பட்டது.
இவர்கள் இருவரும் மன்னாரை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment