பொல்லாதவன், ஆடுகளம், ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் கிஷோர். இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்.
இவர் பல படங்களில் வில்லனாகவும், ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவர் நடிகர் என்பதை தாண்டி ஒரு விவசாயியும் கூட. ஆம், கிஷோர் கிட்டத்தட்ட 8 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
மேலும், சினிமாவிற்கு வராமல் இருந்தால் ஒரு கால் ஏக்கரிலாவது விவசாயம் தான் செய்திருப்பேன், படித்த இளைஞர்கள் அனைவரும் விவசாயம் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும் என சமீபத்தில் ஒரு வார இதழில் பேட்டியளித்துள்ளார்.
0 comments:
Post a Comment