உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

courtதிருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வட்டமடு வம்மியடி வயல் பிரதேசத்தில் உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் 4 தோட்டக்களுடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவரை  புதன்கிழமை மாலை(09) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி ஏ.எஸ்.கே. பண்டார தெரிவித்தார்.
 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சம்பவதினமான 03/09 மாலை வட்டமடு வம்மியடி வயல் பிரதேசத்தில் வேளாண்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகையை சுற்றிவளைத்து சொதனையிட்டபோது அங்கு மறைத்துவைத்திருந்த உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றையும் அதற்கான 4 தோட்டாக்களையும் கைப்பற்றியதுடன் இது தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளனர்

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com