நுவரெலியா குதிரை பந்தய திடலின் சேவையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குதிரை பந்தய திடலின் பராமரிப்பை நடைமுறையில் உள்ள தனியார் கம்பனியிடம் இருந்து இதற்கு முன்னர் பராமரிப்பை மேற்கொண்ட குறித்த ஒரு நிறுவனத்தின் மேற்பார்வைக்கு ஒப்படைப்பதை எதிர்த்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா குதிரை பந்தய திடலின் அருகில் உள்ள மத்திய வங்கி கட்டடத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள ரோயல் தனியார் நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்க இடம் கொடுக்குமாறு பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment