நுகர்வோர் வாரத்தினை முன்னிட்டு இன்று தொடக்கம் பாணின் விலையை நான்கு ரூபாவால் குறைப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் வாரத்தினை முன்னிட்டு பாணின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்த்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்தார்.
இதன் பிரகாரம் 54 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு இறாத்தல் பாண், இன்று முதல் ஒரு வாரத்திற்கு 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை கோதுமை மாவின் விலை அதிகரிப்பையடுத்து பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்த்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment