![images (3)](http://www.unmainews.com/wp-content/uploads/2016/03/images-3-2-150x150.jpg)
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போதே அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது 400 கோடி ரூபாய்க்கு நட்டமேற்படுத்தியதாகவும், பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 14 உறுப்பினர்களைக் கொலை செய்ததாகவும் குறித்த இருவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், பிணை வழங்க நீதிபதி கேமா ஸ்வர்ணாதிபதி மறுப்பு தெரிவித்ததுடன், குறித்த இருவரையும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இதேவேளை, யாழ்ப்பாணம், சங்கானை பகுதியை சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் வான்புலி அமைப்பின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் ராசவல்லன் தவரூபன் ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment