தமது அரசியல் பயணத்தை முடக்க முயற்சிக்கப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் மத்தயி செயற்குழு உறுப்பினர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
கேகாலை நீதிமன்றில் அவர் இதனை நேற்றைய தினம் நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் நேற்றைய தினம் குமார் குணரட்னம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கேகாலை பிறந்து வளர்ந்த தாம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலம் முதல் ஜே.வி.பி கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜே.வி.பி முதலாளி வர்க்கத்துடன் இணைந்து செயற்படத் தொடங்கிய காரணத்தினால் 2011ம் ஆண்டு கட்சியை விட்டு விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் முன்னிலை சோசலிச கட்சியை நிறுவி செயற்பட ஆரம்பித்தது முதல் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காரணத்தினாலேயே தாம் வெளிநாடு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்த காலத்தில் பல தடவைகள் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்த போதிலும், குடியுரிமை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குடியுரிமை வழங்குவது குறித்த பிரச்சினைக்கு அரசியல் நிர்வாகத்திடம் தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டுமென நீதாவன் பிரசன்ன அல்விஸ் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment