முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியில் பௌத்த பிக்கு ஒருவர் எவருக்கும் கட்டுப்படாமல் விகாரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்து உள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண பேரவைக் கட்டடத்தில் நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைக்கப்படுவதற்கு பொதுமக்கள் காட்டிய எதிர்ப்பு காரணமாக கொழும்பிலிருந்து வருகை தந்த காணி அமைச்சின் அதிகாரிகளால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிக்குவிடம் எழுத்துமூலமாக நேரடியாக வழங்கப்பட்டது.
எனினும், அதனையும் மீறி பிக்கு விகாரையைத் தொடர்ந்து கட்டி வருகின்றார். அதனைத் தடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பலரிடம் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்தும் நிறுத்தப்படவில்லை.என தெரிவித்தார்.
0 comments:
Post a Comment