ஆபாச டீவிடிகளை விற்பனை செய்த ஒருவர் புறக்கோட்டை – மல்வத்த வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர் வசம் இருந்து 1202 டீவிடிகள் மற்றும் கனணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment