50 வயதுடைய வகுப்பாசிரியர் 10 வயது மாணவியை கணனி அறைக்கு அழைத்து பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து கம்பளை நீதிமன்ற நீதிவான் சாந்தனி மீகொட வகுப்பாசிரியரை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள மகாவித்தியாலயம் ஒன்றிலேயே நிகழ்ந்துள்ளது.
தமது வகுப்பில் கல்வி பயிலும் 10 வயது சிறுமி ஒருவரை வகுப்பாசிரியர் அழைத்து “உனது சகோதரர் குற்றம் புரிந்துள்ளார். அது தொடர்பாக உன்னிடம் விளக்கமாகக் கூறுகின்றேன். கணனி அறைக்குள் போ” என தெரிவித்துள்ளார். சிறுமி அங்கு சென்றதும் ஆங்கிலப் பாடத்திற்குப் பொறுப்பான வகுப்பாசிரியர் அவ்வறைக்குள் சென்று சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்துள்ளார்.
வகுப்பாசிரியரின் இச் செயல்குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஆசிரியரைக் கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போதே நீதிவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட் டார்.
0 comments:
Post a Comment