முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்கள் தங்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனக் கோரி வியாழக்கிழமை (24) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற இவ் உண்ணாவிரதத்தை நிறைவு செய்யுமாறு முதலமைச்சர் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மூலம் கோரியுள்ளார்.
1 வார காலத்துள் 3 பேர் கொண்ட குழுவை நியமித்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிப்பதாகவும் இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்து 3 மாதத்துள் தீர்வு காண்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், உண்ணாவிரதம் இருந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு தருமாறும் முதலமைச்சர் கோரியுள்ளார்.
0 comments:
Post a Comment