சர்வதேச மகளிர் தினமான நேற்று முதல் இந்த மாதத்தினை இருண்ட மாதமாக பிரகடனப்படுத்தி பெண்கள் அமைப்புகள் வவுனியாவில் அமைதி ஊர்வலம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர்.
வடமாகாண பெண்களின் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பின் ஏற்பாட்டில் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த ஊர்வலத்தினை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா, ஏ9 வீதியில் உள்ள இளைஞர் சேவைகள் மன்றம் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம் வவுனியா, பசார் வீதி வழியாக சென்று மாவட்ட செயலகத்தை அடைந்தது.
வாயினை கறுப்புத் துணிகளால் கட்டியவாறு சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகத்திற்கு எதிரான சுலோக அட்டைகளுடன் ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குரிய மகஜரினையும் கையளித்தனர்.
ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் ' பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தை தடுப்போம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு உடனடியாக தண்டனைகளை நிறைவேற்று, பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறை தொடர்பில் தேசிய கொள்கை வகுக்கபட வேண்டும் என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
இதேவேளை, இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் இந்த ஊர்வலம் இன்று இடம்பெறுவதுடன் மாகாண ரீதியாக ஜனாதிபதியை சந்தித்து மகஜர் கையளிக்க பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment