தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வன்னி மக்களின் கருத்துக்கள்

gjfgjதமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைந்த பேராதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடம் கடந்து இன்று இரண்டாவது ஆண்டில் அது சென்று கொண்டிருக்கின்றது. முன்னைய அரசாங்கத்தை விட இந்த அரசில் என்றாலும் நன்மைகள் கிடைத்துவிடும் என கருதிய பலரது எதிர்பார்ப்புக்கள் இன்று கேள்விக் குறியாக மாறத்தொடங்கியுள்ளது. தற்போது ஒரு அமைதியான ஆட்சி நடைபெறுகின்றதைத் தவிர தமிழ் மக்கள் எதிர்பார்த்த ஒரு ஆட்சியாக இது அமையவில்லை என்பதை நடந்து வரும் சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இதில் காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், நிரந்தர அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம் என பல தேவைகள் தமிழ் மக்கள் முன் இருக்கின்றது. இதில் காணி விடுவிப்பு என்ற பெயரில் சிறியளவிலான காணிககள் விடுவிக்கப்பட்தைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் காரணமாக தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. இன்னும் ஒரு புறம் தமிழ் மக்கள் வாக்களித்தமைக்காக கூட்டமைப்புக்கு சில பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உரிமைக்காக போராடிய தமிழ்மக்கள் மக்கள் எதிர்பார்ப்பது பதவிகளையோ சலுகைககளையோ இல்லை என்பதை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் மீது வைத்திருந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.


14 சிறைச்சாலைகளில் 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த வருட இறுதியில் இரண்டு தடவைகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு புதிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து தமது போராட்டத்தை கைவிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு எங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால்கள் என்பனவும் நடைபெற்றன. ஆனால் அந்த மக்களின் உணர்வுகள் முழுமையாக மதிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியே?. அதன் பின்னர் சில அரசியல் கைதிகள் நிபந்தனை அடிப்படையிலும், ஜனாதிபதியை கொலை செய்ய முன்ற குற்றாச்சாட்டில் இருந்த ஒரு அரசியல் கைதி பொது மன்னிப்பு அடிப்படையிலும் விடுவிக்கப்பட்டனர். ஏனைய அரசியல் கைதிகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டவர்களாக உள்ளனர். இன்றும் அவர்களது குடும்பங்கள் அவலவாழ்வு வாழ்கிறது. இதனால் தம்மை விடுவிக்க கோரி மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம், மகசின் சிறைச்சாலைகளில் கடந்த 23 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இன்று இரண்டு வாரங்களை கடந்த நிலையில்p தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். அவர்களது உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த தலைமைகள், அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது அரசியல் கைதிகளினதும், அவர்களது குடும்பங்களினதும் குற்றச்சாட்டு. இந்நிலையில் இது தொடர்பில் வன்னி மக்கள் வழங்கிய கருத்துக்களே இவை…



என்.ரஜீபன்என்.ரஜீபன், சமூக யெற்பாட்டாளர், குட்செட் வீதி, வவுனியா



c gkcg kதமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தை மீண்டும் மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய போராட்டத்தை நல்லாட்சி அரசு எனக் கூறிக் கொள்ளும் புதிய அரசாங்கம் கவனத்தில் கொள்வதோடு, விரைவான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளாக தமது விடுதலைக்காக போராடும் கைதிகள் தமது குடும்பங்களுடன் மீதமுள்ள காலத்தில் வாழ உதவவேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடயமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளாதது ஏற்புடையதல்ல. கூட்டமைப்பு மக்களுக்காக அல்லது அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்காக மனச்சாட்சியுடன் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க விட்டாலும், தமது எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டாவது ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பை கேட்டுக்கொள்கின்றேன்.


பூ.அரவிந்தன்பூ.அரவிந்தன், சாமாதன நீதவான், இறம்பைக்குளம், வவுனியா


தமிழ் அரசியல் கைதிகள் தற்போது மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு தீர்வு வழங்கப்படாமையால் அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருகின்றது. இது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் இதில் தலையிட்டு அரசியல் கைதிகளின் குடும்பங்கள் தொடர்பாக கவனம் செலுத்தி அவர்களின் விடுவிக்காக செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கு பகுதி தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து தாங்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வந்தவர்கள் சேவை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் அது செய்வதாக தெரியவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாராளுமன்றத்தில் அதிக பதவிகளையும், சலுகைகளையும் முன்னரை விட தற்போது கொண்டுள்ள கூட்டமைப்பு இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கொடுக்கும் அழுத்தம் கூட போதியதாக இல்லை. எனவே இவர்கள் இந்த விடயத்தில் நடந்து கொள்ளும் விதமே அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது.



செ.சந்திரகுமார்செ.சந்திரகுமார், நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர், வவுனியா



ghkhஇந்த அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அவர்கள் பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அவர்கள் தமது விடுதலையை கோரி உண்ணாவிரதத்தில் மீண்டும் ஈடுபடுகின்றனர். இது தொடர்பில் அரசியல்வாதிகள் இதயசுத்தியுடன் செயற்பட்டதாக தெரியவில்லை. ஜேவிபி போன்ற கிளர்ச்சியாளர்களுக்கு அப்போது பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்றால் ஏன் இவர்களுக்கு வழங்கப்பட முடியாது. இது தெர்டர்பில் சிங்கள கட்சிகள், நல்லாட்சி அரசாங்கம் சிந்திக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட தற்போது பாராளுன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவி என்பவற்றை கொண்டுள்ளது. இதனை வைத்து சரியான முறையில் அணுகலாம். அவர்கள் தற்போது பேரம் பேசும் கட்சியாக உள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், மலையக கட்சிகள் மற்றும் ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் தமது எதிர்பார்ப்பை காட்டுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வைப் பெறலாம் என கருதுகிறேன். அவர்களுக்கு பொது மன்னிப்பு தான் தாருங்கள் என நாம் கோரவில்லை. புனர்வாழ்வு அளித்தாவது குறைந்த பட்சம் முழு அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.



ல.சதீஸ்குமார்ல.சதீஸ்குமார், இலங்கையின் முன்னனி கணித ஆசிரியர், வவுனியா



gkuuhyoஇன்று பல வருடங்களாக தமது இளமைக் காலத்தை சிறையில் கழித்து விட்டு எஞ்சியுள்ள சில வருடங்களாவது தமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் சிந்திப்பதை மனிதபிமான ரீதியில் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். அவர்களை வைத்து அரசியல் லாபம் தேட வேண்டாம். அவர்களின் மனநிலை, அவர்களின் குடும்பங்களின் உணர்வுகள் என்பவற்கு மதிபளித்து இதனை மனிதபிமான நடவடிக்கையாக கையாண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. இன்று யுத்தம் முடிந்து 7 வருடம் முடிந்தும் கூட தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடுவது என்பது தமிழ் மக்களின் மனங்களில் ஒரு நல்லெண்ணத்தை எந்த சந்தர்ப்பத்தில் ஏற்படுத்தாது என்பதை புதிய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.



கனகசபை கந்தசாமிகனகசபை கந்தசாமி, மருக்காரம்பளை, வவுனியா



cyjujkஎனக்கு இப்போது 75 வயதாகிறது. நான் இருக்கும் போதே இந்த பிரச்சனைகள் தீர வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது நடக்குமோ என்பது தெரியாது. கடந்த 60 வருடங்களாக உரிமைக்காக நாம் இழந்தவை அதிகம். ஆனால் இன்று யுத்தம் முடிந்த பிறகு கூட எமது உரிமைகளை நாம் போராடியே பெற வேண்டி இருப்பதை பார்க்கும் போது வேதனையளிக்கிறது. குறிப்பாக குறைந்த பட்சம் தமிழ் அரசியல் கைதிகளை கூட இந்த நல்லாட்சி அரசாங்கம் விடத் தயாராக இல்லை என்றால் தமிழர் பிரச்சனையை எப்படி தீர்க்கப் போகிறது. உண்மையில் யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சப்பாடு, தண்ணீர் கொடுத்தோர் இன்று சிறையில் வாடுகின்றனர். இதை இந்த ஜனாதிபதி தனது பிள்ளைகள், தமது உறவுகள் என நினைந்து அவர்களின் மனநிலையில் இருந்து சிந்திக்க வேண்டும். இது மனிதாபிமான ரீதியில் அணுகப்பட வேண்டிதொன்று என்பதை அரசியல் தலமைகள் புரிய வேண்டும். நான் வாழும் காலத்திலேயே அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எனது அவா.



மாணிக்கம் ஜெகன்மாணிக்கம் ஜெகன், கலைஞர், வவுனியா

 

இலங்கையினுடைய நீண்டகால பிரச்சனைகள் இரண்டு.


ஒன்று, இனப்பிரச்சனை மற்றது இந்த போராட்டம் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனை. இந்த இரண்டு விடயங்களும் kuhfjkநிறைவேற்றப்படும் என தேர்தல்களின் போது வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால் இன்று…? அதை நினைக்கும் போது தான் ரொம்ப ஆத்திரமாகவும், அசிங்கமாகவும் இருக்கிறது. இந்த விடயங்கள் தேர்தல் காலங்களில் பிரதான விடயங்களாக தேர்தல் மேடைகளில் ஒலிக்கப்பட்டன. இதை வைத்து தேர்தல் வியூகம் வகுத்து எல்லோரும் பேசினார்கள். ஆனால் இன்று அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் இதுவரை நடக்கவில்லை. நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள் மிக மிக மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்களின் குடும்பங்கள் மிகவும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள். இலங்கையில் அதிகூடிய அதிகாரம் படைத்த மூன்றாவது தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இருக்கிறார். இருந்தும் என்ன நடக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி. பதவிகளை வைத்து எதையும் செய்ய முடியாது என்றால் பிறகு எதற்கு இந்த பதவி. நாங்கள் எங்களது ஆகக்குறைந்த அபிலாசைகள் என்றாலும் நிறைவேற்றப்படும் என நல்லாட்சி அரசு மீது நம்பியிருந்தோம். ஆனால் அது இன்று நடக்கவில்லை. இந்த அரசை ஆட்சிக்கு கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியாது போனால் இந்த அசிங்னமான அரசியலில் இருந்து இவர்கள் விலக வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் அவசியமாக செய்யப்பட வேண்டியவிடயம். இதை புரிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.


இவ்வாறு தமிழ் மக்கள் மனங்களில் நீறுபூத்த நெருப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனை இருந்து வருகிறது. அவர்களின் உணர்வுகளையும், நிலமைகளையும் இந்த தமிழ் தலைமைகள் மற்றும் புதிய நல்லாட்சி அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை உடனடியாக விடுத்து இந்த சமூகத்தில் அவர்களும் ஒரு பிரஜையாக அவர்களின் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.


 

-கே.வாசு-

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com