வித்தியாவின் படுகொலைச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அந்தத் தகவலைத் தங்களுக்கு இரகசியமான முறையில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல் தருவோர் தொடர்பான இரகசியம் பேணப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தகவல் தெரிவிக்க விரும்புவபர்கள் 077 329 1500, 077 850 3002 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு எந்த வேளையிலும் தொடர்புகொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா தொடர்பாக நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையின் முடிவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐ.பி.நிசாந்த சில்வா ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.
வித்தியா கொலைச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது புங்குடுதீவில் உள்ள பலர் தகவல்களை வழங்கியிருக்கின்றனர். இதன் முலம் மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தத் தகவல்கள் எமது விசாரணைக்கு உதவியாக அமைந்தன.
புங்குடுதீவில் உள்ள மேலும் பலருக்கு வித்தியாவின் கொலைச் சம்பவம் தொடர்பாக தெரிந்திருக்கின்றது. ஆனால் தகவல்களைத் தருவதற்கு அவர்கள் பின்னடிக்கின்றார்கள். இந்தக் கொலை தொடர்பாக தகவல் தருபவர்கள் தொடர்பான விபரங்கள் மிகலும் இரகசியமான முறையில் பேணப்படும்.
எனவே,இக் கொலைச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் எமது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்
0 comments:
Post a Comment