சொந்த விருப்பம் என்ற பெயரில் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்த 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகள் முகாம்களிலும், அவற்றுக்கு வெளியேயும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தினர் அணுகி அவர்களின் இப்போதைய நிலை குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் 3 பக்கங்கள் கொண்ட கேள்விகளைக் கொடுத்து கருத்து கேட்டு வருகின்றனர்.
இந்தப் பட்டியலில் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கே அனுப்பி வைப்பது குறித்த கேள்விகள்தான் முதன்மையாக இடம் பெற்றுள்ளது. இது பல ஐயங்களை ஏற்படுத்துகிறது.
அகதிகளை சொந்த விருப்பம் என்ற பெயரில் இலங்கைக்கு அனுப்ப வஞ்சக நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த கருத்துக் கேட்பில் சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கைக்குத் திரும்ப விரும்புவதாக கூறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி, தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் அனைவரும் தாயகம் திரும்ப விரும்புகின்றனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. இத்தகைய கருத்துக் கேட்புகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment