ஆரம்ப நிகழ்வாக மக்கள் தமக்கு நிரந்தரமான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என உணர்வெழுச்சியுடன் மெழுகுவர்த்திகளை ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந் நிகழ்விற்கு சமூகமட்ட அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டு நிலைமாறுகால நீதியினை வலியுறுத்தி தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
ஐக்கிய நாடுகள் சபையினால் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களினை மேம்படுத்துவதனை தோக்கமாகக் கொண்டும் நிலைமாறுகால நீதியினை முக்கியமான தூண்களில் ஒன்றான உண்மைக்கான உரிமையினை வலியுலுத்தும் விதத்திலும் “உண்மைக்கான உரிமைக்குரிய சர்வதேச தினம்” சர்வதேசரீதியாக மார்ச் 24 ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை அரசானது 2015ம் ஆண்டு மனித உரிமைகள் பேரவைக்கு நிலைமாறு கால நீதியினை உறுதிப்படுத்தும் வகையிலும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறையினை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்திருந்தது.
ஆனால் இன்றுவரையிலும் காத்திரமாக எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. காணாமற்போனோர் தொடர்பான எந்தவித உண்மைகளும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்படவில்லை.
அவர்களது உரிமைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இந் நிலையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் சமூகமட்ட அமைப்புக்களுடனும் குறித்த பாதிக்கப்பட்ட இலக்கு குழுவினருடனும் நீண்ட காலமாக அவர்களது உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றது.
இந் நிலையில் நிலைமாறு கால நீதியின் முக்கியத்துவத்தினை தெரியப்படுத்தும் விதத்திலும் இத்தினத்தினை நினைவு படுத்தும் விதத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment