மன்னார் தோட்டவெளி பகுதியில் நேற்று (13)அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இச்சம்பவம் ஏ 14 தலைமன்னார் பிரதான வீதி தோட்டவெளி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதி காலை இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான மீன்களை எற்றி செல்லும் கூளர் வாகனத்தில் மூன்று பேர் பயணித்துள்ளனர். இவர்களில் அனுராதபுரத்தை சேர்ந்த சந்தன தீபால் 46 என்ற குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார். மேலும் அஜித் நிசங்க 34 என்பவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
மீன்களை ஏற்றி செல்லும் கூளர் லொறிஒன்று அனுராதபுரத்திலிருந்து மீன்களை ஏற்றி செல்வதற்காக தலைமன்னார் சென்றுள்ளது. இதன்போது சாரதி வாகனத்தை மிகவேகமாக ஓட்டி சென்றுள்ளார்.
வாகனம் தோட்டவெளி பகுதியில் வந்தபோது வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் உள்ள பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.இதில் விபத்துக்குள்ளான வாகனம் பலத்த சேதத்துக்குள்ளாகியது.
எவ்வாறிருப்பினும் வாகனத்தின் சாரதி காயங்களின்றி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment