‘தங்கமகன்’ படத்திற்குப் பிறகு தனுஷ், பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து வந்தார். இதில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பெயரிடாமலே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
தற்போது படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்திற்கு ‘ரெயில்’, ‘மிரட்டு’ என பல பெயர்கள் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது ‘தொடரி’ என பெயர் வைத்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கின்றனர்.
இது நீண்ட நாட்களாக காத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது சமூக வலை தளங்களில் இந்த போஸ்டர் வேகமாக பரவி வருகின்றது.
பிரபு சாலமன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், கீர்த்திசுரேஷுடன் பூஜா ஜாவேரி, கணேஷ் வெங்கட்ராமன், ராதாரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
0 comments:
Post a Comment