விவசாயிகள் உரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான நிதியினை, எதிர்வரும் ஏப்ரல் மாத முற்பகுதிக்குள் வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக விவசாயிகள் தமக்குத் தேவையானவாறு இரசாயனப் பசளைகளையோ, இயற்கைப் பசளைகளையோ பெறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசளை நிவாரணங்கள் தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.இதற்கு முன்னர் வழங்கப்பட்ட உர மானியத்தின் கீழ் உரம் வழங்குவதற்குப் பதிலாக உரத்திற்கான பணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment