உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு இன்று மாலைக்குள் முடிவொன்றைப் பெற்றுத்
தருவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதிமொழி வழங்கியுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு வெலிக்கடை மகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த வடமாகாண ஆளுனர் அங்கு சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 அரசியல் கைதிகளையும் சந்தித்து உரையாடியதுடன், அவர்களின் உடல் நிலைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடியான பணிப்புக்கு அமைய தான் சிறைச்சாலைக்கு வந்திருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கைதிகளின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறி மீண்டும் அவரைச் சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் கூறினார்.
இன்று மாலைக்குள் ஜனாதிபதியுடன் சந்தித்து உரிய தீர்வொன்றைக் பொற்றுத் தருவதாகவும் வடமாகாண ஆளுநர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இதேவேளை, 15 நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. நால்வருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சகலரும் உடல் சோர்வடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment