ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய கொழும்பு பொதுக் கூட்டத்துக்கு ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் கட்டாயப்படுத்தி மக்களை அழைத்து வரவுள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், இது அரசியல் கூட்டமல்ல என்ற வதந்தியைப் பரப்பி, இளைஞர் அமைப்புக்களையும் கலந்து கொள்ளச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 17ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 500 உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச மேறே்கண்டவாறு குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment